News October 26, 2024
மதுரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான தகவல்களும் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சங்கீதா தகவல் அளித்துள்ளார். (பகிரவும் – SHARE IT)
Similar News
News February 19, 2026
BREAKING மதுரைக்கு மஞ்சள் அலர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக வருகிற (பிப்.22) மதுரை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News February 19, 2026
மதுரை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<
News February 19, 2026
தேர்தல்: மதுரையில் 84 எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரை நகரில் நீண்ட நாள் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் நேற்று 24 பெண்கள் உட்பட 84 எஸ்.ஐ.,க்கள் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டதாக மாநகர் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


