News August 20, 2025
மதுரை: மகால் பகுதியில் புற காவல் நிலையம் திறப்பு

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூய மரியன்னை பேராலயம் அருகே புதிதாக பொதுமக்களின் நலனுக்காக புற காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News February 4, 2026
மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.
News February 4, 2026
மதுரையில் கைதி தப்பி ஓட்டம் – அதிர்ச்சி

கோயமுத்தூர் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வந்த போது அதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இயர்மான்(29) என்பவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து இயர்மான் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News February 4, 2026
மதுரை: ரூ.29,380 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

இந்தியா முழுவதும் இந்திய தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக் பிரிவில் 2019 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.12,000 – ரூ.29,380 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <


