News January 22, 2026
மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.
Similar News
News February 13, 2026
மாநகர காவல்துறை இரவு ரோந்து அட்டவணை

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் சந்திரலேகா தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
மதுரை: பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி செல்வராணி (40). ரவிக்குமார் ராஜஸ்தானில் தோசை கடை வைத்துள்ளார். செல்வராணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மேலூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் சந்திரமோகன்(32). இவர் சிவா மாருதி கார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லாமல் இருக்கவே, மனைவி சிந்து அதை கண்டித்துள்ளார். இந் நிலையில் வெளியே சென்ற சந்திரமோகன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து தனது அறைக்கு சென்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


