News September 28, 2025
மதுரை: மகளின் தோழி கர்ப்பம் தந்தை தலைமறைவு

உசிலம்பட்டி அருகே நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 35.பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மகளும், அருகே வசிக்கும் 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதித்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பம், இதற்கு சதீஷ்குமாருக்கு காரணம் எனத்தெரிந்தது. அவரை மகளிர் போலீசார் தேடிவருகின்றனர்.
Similar News
News January 2, 2026
மதுரை: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <
News January 2, 2026
மதுரயில் சோகம்… ஒன்றரை மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
மதுரை: ஆட்டோ டிரைவர் கொடூர கொலையில்.. புதிய தகவல்!

பெருங்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அருணாச்சலம்(32 ), சௌராஷ்டிர காலனி கார்த்திக்(28), சக்திவேல்(23) தண்யாயுதபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்தது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.


