News November 6, 2025

மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News November 6, 2025

மதுரை: வைகை ஆற்றில் லோடுமேன் உடல் மீட்பு

image

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் ராஜா மகன் சந்தோஷ் 18 லாரி கம்பெனி லோடுமேன். இவர் நேற்று முன்தினம் மதியம் பவர் ஹவுஸ் பகுதி வைகை ஆற்றில் குளித்த போது மூழ்கினார் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடினர், பின்னர் துவரிமான் அருகே சந்தோஷ் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

மதுரை: சாலையில் ஆறாக ஓடிய பெட்ரோல்

image

வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கட்டக்குளம் இடையில் கப்பலூரில் இருந்து, வேடசந்தூருக்கு 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடு ஏற்றிக்கொண்டு சக்திவேல் என்பவர் ஓட்டிவந்த லாரி, திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதனால் பெட்ரோல் முழுதும் வடிந்து ஆறாக ஓடியது. வாடிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

News November 6, 2025

மதுரை: பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

image

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர் செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!