News November 7, 2025
மதுரை: பைக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

சமயநல்லூர் அருகே தோடனேரியைச் சேர்ந்த விவசாயி மாயண்டி, தனது மகன் கிருஷ்ணன் உடன் பைக்கில் சென்றபோது, சமயநல்லூர் கண்மாய் கரை சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாயண்டி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிறுவன் கிருஷ்ணன் லேசான காயமடைந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 9, 2026
மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

மதுரை, குலமங்கலம், பி.பி.குளம் பகுதியில் நாளை (பிப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. நாராயணபுரம், ஆத்திகுளம், ஐயர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பி.பி.குளம், மருது பாண்டியர் நகர் என மின் சேர் பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ள மின்தடை பகுதிகளை காண <<19089541>>CLICK<<>> *SHARE
News February 9, 2026
மதுரை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

மதுரை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0452 – 2580259. SHARE பண்ணுங்க!
News February 9, 2026
மதுரை: பிறந்தநாளன்று வாலிபருக்கு நேர்ந்த சோகம்

மதுரை, வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் (19) தாதம்பட்டியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று அவர் பிறந்த நாளை கொண்டாட கேக் வாங்கி நண்பர் பிரபுவுடன் சென்றபோது, முனியாண்டி கோவில் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த மனோஜ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


