News September 15, 2024
மதுரை: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி 31, சில நாட்களுக்கு முன் இரவு குடிபோதையில் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகள் சத்தம் போட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் எழுந்து சிறுமியைக் காப்பாற்றினர். இது குறித்து ஊர் நல அலுவலர் கவுசல்யா புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் தொழிலாளியைக் கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
மதுரையில் மக்கள் சாலை மறியல்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகள் மதுரை மத்திய தொகுதிகளின் கீழ் வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் வெளியேறி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
News November 3, 2025
மதுரை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<
News November 3, 2025
மதுரை: லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி.!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் திருக்கண்ணன் மகன் அழகுசுந்தரம்(30). இவர் கீரைத்துறையில் ரைஸ்மிலில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். சிந்தாமணி மெயின் ரோட்டில் நேற்று இவர் பைக்கில் சென்ற போது, முனீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த லாரி இவர் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுக்குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


