News October 28, 2025

மதுரை பெற்றோர்களே மறந்துராதீங்க.!

image

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. நேற்று துவங்கிய இத்திட்டம் அக்.31 வரை 4 நாட்களுக்கு நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமார் 1,19,447 குழந்தைகள் இதன் மூலம் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 28, 2025

மதுரை – துபாய் விமானத்தில் நடுவானில் கோளாறு

image

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதியம் புறப்பட்ட சில நேரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 173 பயணிகள் இருந்த அந்த விமானம் ஆய்வுக்குப் பிறகு சுமார் 8 மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டது.

News October 28, 2025

மதுரை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 28, 2025

மதுரை: ஆதார், பான் கார்டு இருக்கா…? இது கட்டாயம்!

image

மதுரை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!