News March 22, 2024

மதுரை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி பலி

image

மதுரை பொதிகை நகரை சேர்ந்த 11 வயது சிறுமி நேற்று அவரது வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Similar News

News October 26, 2025

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 26, 2025

மதுரை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல்<> www.rrbapply.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 26, 2025

மதுரை: போட்டி தேர்வில் தோல்வி இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை முடக்கத்தானை சேர்ந்தவர் செல்வம், இவரது 3வது மகன் சந்துரு பி.இ., பட்டதாரியான இவர், குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்தார். இரு மாதங்களுக்கு முன் நடந்த குரூப் 4 தேர்வில் பங்கேற்றார். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். அக்.22ல் தேர்வு முடிவு வெளியானது. இதில் சந்துரு குறைவான மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறவில்லை. இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!