News October 15, 2024
மதுரை பள்ளி கல்லூரிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு……
மதுரை மாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று மதுரையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 20, 2024
மதுரை: இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்
இன்று (நவ.20) மதுரை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரம் மதுரை மாவட்ட காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமயநல்லூர், ஊமச்சிகுளம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் போன்ற மதுரை மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரங்கள் மதுரை மாவட்ட காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
விமான நிலைய விரிவாக்கம் – எம்.பி அறிக்கை
விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஒரு பக்கம். விமான நிலைய வளர்ச்சி மற்றொரு பக்கம். மக்கள் நலனையும், விமான நிலைய விரிவாக்கத்தையும் சமநிலைப்படுத்தி இதற்கான தீர்வு விரைவாக எட்டப்படும் என நம்புகிறோம். மேலும் தாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 20, 2024
மதுரையில் 2018-24 வரை 542 விபத்துக்கள்
சமயநல்லூர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை, திண்டுக்கல், சமயநல்லுார் சாலையில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் 137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயமடைந்ததாக காவல் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (நவ.20) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.