News September 3, 2025

மதுரை பக்தர்கள் கவனத்திற்கு

image

சந்திர கிரகணம் செப்.7 அன்று நிகழ்கிறது. இதனால் அன்று மீனாட்சியின் கோவில், அழகா்கோவில் கள்ளழகா் கோயில், துணைக் கோயில்களான ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஐயப்பன் கோயில், வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில், மேலூா் ஆஞ்சநேயா் கோயில் ஆகிய கோயில்களில் பிற்பகல் 4 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பின் செப்.8 காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும்.

Similar News

News September 3, 2025

மதுரை: ரூ.71,900 ஊதியத்தில் அரசு வேலை ரெடி

image

மதுரை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.30 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும் நிலையில் மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். SHARE பண்ணுங்க

News September 3, 2025

மதுரை மாநகர பகுதியில் இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாநகர் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தல்லாகுளம், தெப்பக்குளம், அவனியாபுரம், தெற்கு வாசல், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 2, 2025

மதுரை மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

image

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!