News August 6, 2024
மதுரை நூலகத்தை பராமரிக்க 97 லட்சம் ஒதுக்கீடு

மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட நூலகத்தில் வாசகர்களுக்கு தேவையான ஆண் பெண் கழிவறை, குடிநீர், இணையதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று (ஆக.06) விசாரணைக்கு வந்தபோது, நூலகத்தை பராமரிக்க 97 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News August 29, 2025
மதுரையிலேயே IT வேலை.. HCL தரும் சூப்பர் வாய்ப்பு..

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள புராடெக்சன் சப்போர்ட் புரோபஷனல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக<
News August 29, 2025
மதுரையில் நாளை மின்தடை

திருமங்கலம், ஜவகர் நகர், பி.சி.எம்., நகர், அசோக் நகர், மம்சாபுரம், சந்தைப்பேட்டை, சிவரக்கோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனுார், கரடிக்கல். ஒத்தக்கடை நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லுாரி, கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, கடச்சனேந்தல், மேலுார், திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி இந்த பகுதிகளில் மின்தடை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 29, 2025
மதுரையில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி

மதுரைக் கல்லுாரியில் அசார் சல்மான் சிலம்ப மையம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்ப மையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், 79 வகையான சிலம்ப சுற்றுமுறையை ஒன்றரை மணி நேரம் செய்து, சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். பயிற்சியாளர் அசாருதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.