News March 5, 2025

மதுரை : தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாற்றம்

image

சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 6,7 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .

Similar News

News October 19, 2025

டி. கல்லுப்பட்டி அருகே வாலிபர் மர்மச்சாவு

image

மதுரை டி. கல்லுப்பட்டி முத்துராமலிங்கபுரம் நாச்சியப்பன் மகன் ராஜ்குமார் 32 குன்னத்தூர் சுபலட்சுமியை காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆண் பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் லட்சுமி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ராம்குமாரும் மனைவியின் வீடு அருகே வாடகை தனிவீட்டில் இருந்த போது மர்மமான முறையில் தூங்கிய நிலையில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 19, 2025

மீனாட்சி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா வரு கிற 22-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் 28-ந் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில், முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வெள்ளி கவசம் மற்றும் பாவாடை சாத்துபடி நிகழ்ச்சியும், விஷேச அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 19, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!