News October 18, 2025

மதுரை: திடீர் சோதனையில் சிக்கிய அரசு அதிகாரிகள்

image

லஞ்ச ஒழிப்பு ADSP சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ் பிரபு, சூரியகலா, பாரதி பிரியா மற்றும் போலீசார் நேற்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில் பி.டி.ஓ., மலர்மன்னனிடமிருந்து கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.மேலும் அலுவலர்கள் உட்பட 8 பேரிமிருந்து ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 18, 2025

மதுரை : தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

image

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும்.
SHARE பண்ணுங்க.

News October 18, 2025

மதுரை: தெரு நாய்களைக் கொன்றவர்களை தேடும் போலீசார்

image

மது­ரை­ விலங்­குகள் நல பிரதிநிதி முருகேஸ்­வரி எஸ்.எஸ். காலனி போலீசில் இன்று கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது : எஸ்.எஸ். காலனியில், தெரு நாய்­களை மர்ம நபர்­கள் விஷம் வைத்து கொலை செய்­துள்ளனர். அந்த நாய்­களுக்கு பிரே­த­ ப­ரி­சோ­தனை செய்து, அவை­களை கொன்ற கொலை­யாளி­கள் மீது உரிய எடுக்­க­ வேண்டும் என தெரிவித்துள்­ளார். எஸ்.எஸ்
காலனி போலீ­சார் விசாரிக்கின்­ற­னர்.

News October 18, 2025

மதுரை அருகே லாரி மோதி கொடூர விபத்து

image

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி அருகே மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி பழங்களை ஏற்றி சென்ற வேன் முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ஓட்டுனர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

error: Content is protected !!