News March 23, 2024

மதுரை டூ போடி வரை மின்சார ரயில்

image

மதுரை – போடி வரை சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று (மார்ச் 23) ரயில்வே அதிகாரிகள் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை இருப்புப் பாதைகளை ஆய்வு செய்தனர். விரைவில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தனர்.

Similar News

News December 29, 2025

தேனி: கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் – தம்பி!

image

கோம்பையை சேர்ந்தவர் முருகேசன் (55). இவர் இடுக்கி மாவட்டத்தில் பணிபுரிந்தர். சம்பவத்தன்று தான் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது உடலை கைப்பற்றிய நெடுங்கண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரனையில், முருகேசனின் சகோதரர் மகன்களான விக்னேஸ்வர் (25), புவனேஸ்வர் (25) ஆகியோர் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முருகேசனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததது தெரியவந்தது.

News December 29, 2025

தேனி: அரசு பேருந்து மீது மோதி கண்டக்டர் பலி!

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (54). அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25ம் தேதி பணி முடித்துவிட்டு இரவு டூவீலரில் காமாட்சிபுரம் அருகே சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியகுளம் போலீஸார் ஓட்டுநர் கதிரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 28, 2025

தேனி: SIR 2025 பட்டியல் வெளியீடு – CLICK பண்ணுங்க!

image

தேனி மக்களே, SIR 2025 வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கான்னு தெரியலையா? அதை பார்க்க நீங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ள தேவை இல்லை. நீங்களை பார்க்க வழி இருக்கு
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து வாக்காளர் எண் பதிவு பண்ணுங்க..
2. மாவட்டத்தை தேர்வு பண்ணுங்க.
உங்க பெயர் வந்தது என்றால் உங்க பெயர் வாக்களார் பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது என அர்த்தம். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!