News January 23, 2026
மதுரை டூ தஞ்சாவூருக்கு படப்பானியில் சென்ற இதயம்

விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இளைஞரின் குடும்பத்தினர், இதய தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இளைஞர் இதயம் உடலில் இருந்து எடுக்கப்பட்டது. காலை 9 மணிக்கு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்ப்பட்டு தஞ்சாவூருக்கு 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு செல்லப்பட்டது.
Similar News
News January 25, 2026
மதுரை: VOTER ID ல இத மாத்தனுமா?

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 25, 2026
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில் வளாகத்தில், வரும் 28.01.2026 அன்று காலை சுமார் 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
News January 25, 2026
மதுரை மண்டலத்தில் பி.எப். குறைதீர் முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நிறுவனம் சார்பில், குறைதீர் முகாம் மதுரை மண்டலத்தில் ஜனவரி 27-இல் நடைபெறுகிறது. மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டக் கிளை அலுவலகங்களில் குறைதீர் முகாம் ஜன 27-ம் ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.


