News October 25, 2025

மதுரை டிராவல்ஸ் ஓனர் சேலத்தில் தற்கொலை

image

மதுரை, ஊத்தங்குடி, வள்ளல் நகரை சேர்ந்தவர் திவாகர், 29. சொந்தமாக டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதுதொடர்பாக அக். 20ல், சேலம் வந்த அவர், சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.அன்று இரவு துாங்கச்சென்ற அவர், நேற்று முன்தினம் முதல், வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் பசீர் அகமது, அறைக்கு சென்று பார்த்தபோது, திவாகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Similar News

News January 28, 2026

மதுரை: கல்லூரியில் சேர ரூ.40,000 உதவித் தொகை!

image

மதுரை மாவட்ட மக்களே.. உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE IT)

News January 28, 2026

மதுரை வேளாண் கல்லூரியில் விதைகள் விற்பனைக்கு தயார்

image

மதுரை வேளாண் கல்லூரி வேளாண் அறிவியல் நிலையத்தில், விதைச்சான்று துறையால் அங்கீகரிக்கப்பட்ட வம்பன் 8.11 ரக உளுந்து விதைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தம் 33 டன் தரமான வீரியம் கொண்ட விதைகள் கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு கிலோ ரூ.110-க்கு வாங்கி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 94420-54780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News January 28, 2026

மதுரை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

மதுரை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!