News January 15, 2026
மதுரை: டிப்பர் லாரியில் சிக்கி ஒருவர் பலி

ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்தவர் வீரமுத்து (54). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் இருந்த சரக்கை இறக்கி விட்டு, பின்பகுதியை தூக்கி வைத்தபடி அதை இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மெக்கானிசம் பழுதாகி சட்டென கீழே இறங்க அதில் தலை சிக்கி டிரைவர் வீரமுத்து பலியானார். இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.
Similar News
News January 24, 2026
மதுரை ஓபிஎஸ் அணி – இபிஎஸ் அணிக்கு மாறிய நிர்வாகிகள்

மதுரை புறநகர், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டாம் பகுதியை சேர்ந்த அதிமுக உரிமை மீட்பு குழு வடக்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையில் சுமார் 25 நபர்கள், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News January 24, 2026
மதுரை : 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மதுரை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
மதுரை: மகன் கண்முன்னே தாய் பலியான சோகம்.!

திருப்பரங்குன்றம் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனாட்சி . நேற்று இவரது மகன் கொப்பையன் டூவீலரில் பின்னால் அமர்ந்து திருமங்கலம் சாலையில் சென்றுள்ளார். அப்போது கற்பகநகர் வேகத் தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது, மீனாட்சி தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.


