News April 21, 2024
மதுரை: டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு

கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(32)க்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத் தேவன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு நவீன்குமார் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டது. இது குறித்து கீழவளவு போலீசார் வெள்ளையத் தேவன், மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், பாலு ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வெள்ளைய தேவன் மற்றும் அசோக்கை இன்று கைது செய்தனர்.
Similar News
News July 6, 2025
மதுரையில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

மதுரை மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<
News July 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

மின்மயமாக்கும் பணிக்காக, மதுரை – ராமேஸ்வரம் ரயில் சேவை ஜூலை 7 முதல் 31ஆம் தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் ஜூலை 23, 24 தவிர) ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 56711 மதுரை-ராமேஸ்வரம், ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து. (06714) ராமேஸ்வரம்-மதுரை, ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் முன்னதாக திட்டமிடுமாறு வேண்டுகோள்.