News December 20, 2025
மதுரை: சேலையில் தீ வைத்து மூதாட்டி தற்கொலை

மதுரை பீ.பீ .குளத்தை சேர்ந்தவர் முனியம்மாள்(58). சற்று மன நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று வீட்டின் பாத்ரூமிற்குள் சென்று சேலையில் தீ வைத்து கொண்டார். கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
மதுரை: ரூ.60 லட்சம் மோசடி: கூலாக போஸ் கொடுத்த கும்பல்..!

மதுரையை சேர்ந்த தம்பதியினரை டிஜிட்டல் அரஸ்ட் செய்ததாகக் கூறி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நீலகிரி மாவட்டம் கூடலுார் மரப்பாலம் சுதீஷ் என்ற உமர்பாரூக் (28), பந்தலுார் முகமது ரியாஷ் (29), கேரளா மலப்புரம் பாபு (49), அப்துல் கபூர் (43), முகமது சையது (34), முகமது சமீம் (34) என மொத்த கும்பலை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
மதுரை: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

மதுரை வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<
News December 20, 2025
மதுரை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகி

மதுரை மாவட்டம், துவரிமானையைச் சேர்ந்த திமுக ஒன்றிய அவைத்தலைவர் நாகமலையின் மகன், திமுக இளைஞரணி நிர்வாகி கருணாகரன் மீது, வாடகைக்கு குடியிருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், வன்புணர்வு செய்ய முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருணாகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


