News December 29, 2025
மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

பேரையூர் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள்(75). தனித்து வசித்து வந்த இவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராமல் சேலையில் தீப்பற்றியது. இதில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
மேலூர் அருகே லாரி, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணன்(54) பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபியுடன்
காரில் இன்று அதிகாலை 2 மணிக்கு மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். தெற்குபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது பூக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டி, சாகுல், மணி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
மதுரையில் பரபரப்பு…..12 வயது சிறுவன் தற்கொலை.!

கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் லிங்கேஸ்வரன்(12). வீட்டில் உள்ள சைக்கிளை ஓட்டுவதில் அவரது இளைய சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதைப் பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த லிங்கேஸ்வரன் வீட்டில், நைலான் கயிறு எடுத்து தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
மதுரை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

மதுரை மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இங்கு <


