News March 19, 2024
மதுரை: சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவருக்கேனும் உதவி தேவைப்படும் ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.
News April 5, 2025
உணவு ஆர்டர் பெயரில் மோசடி.. போலீஸ் எச்சரிக்கை

இணையதளங்களில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் ஆர்டர் செய்யாத உணவு, தங்களுக்கு வந்திருப்பதாக கூறி அதை திருப்பி அனுப்ப OTP கேட்கும் நபர்களிடம் எந்த விபரமும் தெரிவிக்க வேண்டாம் என்று மதுரை மாநகர் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
News April 5, 2025
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறது.