News March 5, 2025

மதுரை சாலையோர உணவு வியாபாரிகளுக்கு ஒரு நற்செய்தி

image

மதுரையில் உள்ள தெருவோர உணவு வியாபாரிகளுக்கு FSSAI பதிவு கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடம் பெயரும் (அ) பயணம் செய்து (நகரக்கூடிய வண்டிகள் மூலம்) பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் தெரு வியாபாரிகள், புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு பதிவு கட்டணம் கிடையாது என உணவு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News April 21, 2025

இளைஞர் கதையை முடித்த மாஜி ஏட்டு

image

மதுரை, ஆனையூர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், திருச்சியில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் அழகுபாண்டி, கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.நேற்று, போதையிலிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடராஜன், வீட்டிற்குள் புகுந்து, அழகுபாண்டியை அரிவாளால் வெட்டினார். அந்த இடத்திலேயே அவர் பலியானார்.

News April 20, 2025

மதுரையில் 613 உணவகங்களுக்கு நோட்டீஸ்

image

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 613 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக RTI-ல் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 51 உணவகங்கள் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததாக நீதிமன்றம் மூலம் சுமார் 108 உணவக உரிமையாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

News April 20, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (20.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!