News September 6, 2025
மதுரை: சந்திர கிரகணம் நிகழ்வை பார்க்கலாம்

சந்திர கிரகணம் நாளை இரவு 9:58 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் விலகுகிறது. சந்திரன் மறைப்பு 11 மணி அளவில் துவங்கி அதிகபட்சமாக 11:41 மணிக்கு முழுமையாகி 12:22 வரை நிலைத்து நிற்கும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அதிகாலை 1:26 மணிக்கு முழுமை அடையும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலே பார்த்து மகிழலாம் என மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
மதுரையில் ரூ.2.30 லட்சம் பறிமுதல்

மதுரை வடக்குமாசி வீதி டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் கரிமேடு ராஜேந்திரன் (67), நாகமலைபுதுக்கோட்டை சக்திவேல் (44), முண்டுவேலம்பட்டி ஜெயபால் (45), பொன்னகரம் சின்னவெங்கையன் (55), ஆண்டிப்பட்டி தேவேந்திரன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 283 மதுபாட்டில்கள், ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
News September 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (06.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
மதுரை மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை..!

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அல்லது மேலதிகாரி போல நடித்து ஊழியர்களிடம் அவசரத் தேவைக்காக பரிசு அட்டைகள் வாங்கச் சொல்லவோ பணம் பரிமாறச் சொல்லவோ செய்கின்றனர். அந்நிய எண்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், சந்தேகமான மின்னஞ்சல், செய்திகளை கவனமாக கையாளவும், சந்தேகம் இருந்தால் காவல்துறையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.