News February 4, 2026
மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.
Similar News
News February 9, 2026
மதுரை: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 23 இருவரும் முன்விரோதம் காரணமாக சங்கம் கோட்டையைச் சேர்ந்த முத்தையா என்பவர் வீட்டில் நேற்று பிப்ரவரி 8 அதிகாலை 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ், பிரவீனை கைது செய்து குடும்பப் பகையா, மது போதையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
FLASH மதுரை: முகத்தை சிதைத்து கொன்ற கொடூரம்

திருவாதவூர் அருகே உலகுபிச்சன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(31) மாணிக்கம்பட்டி பகுதியில் உள்ள உடைகல் குவாரி பள்ளத்தில் முகத்தில் வெட்டு காயங்களுடன் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெண் தொடர்பு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை தொடர்பாக சிலரை பிடித்து மேலூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

மதுரை, குலமங்கலம், பி.பி.குளம் பகுதியில் நாளை (பிப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. நாராயணபுரம், ஆத்திகுளம், ஐயர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பி.பி.குளம், மருது பாண்டியர் நகர் என மின் சேர் பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ள மின்தடை பகுதிகளை காண <<19089541>>CLICK<<>> *SHARE


