News January 2, 2026
மதுரை: கால்வாயில் குளித்தவர் பரிதாப பலி

திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). திருமணம் ஆகாதவர். நேற்று அப்பன் திருப்பதி அருகே கள்ளந்திரி பெரியாற்று கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது சகோதரி கீதா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 3, 2026
மதுரை: கணவன் & மாமியார் கொடுமையால் பெண் தீக்குளிப்பு

மேலூர், நரசிங்கம்பட்டியை சேர்ந்த விவேக் மோகனின் மனைவி தனலட்சுமி(27), தனது கணவர் வீட்டு லோன் இருப்பதாக கூறியதை தொடர்ந்து தான் அணிந்திருந்த 52 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணத்தை தந்துள்ளார். இதை திருப்பி கேட்ட போது கணவர் & மாமியார் கலைச்செல்வி(55) சேர்ந்து இவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் உடலில் தீ வைத்து கொண்ட தனலட்சுமி உயிரைக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
News February 3, 2026
மதுரை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

மதுரை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 3, 2026
மதுரையில் 16 பவுன் நகை கொள்ளை

மதுரை கூடல்புதூர் ராம் முனிநகர் ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். இதனை கண்காணித்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதில் ஒரு வீட்டில் 8 பவுன், மற்றொரு வீட்டில் 8 1/2 பவுன் என மொத்தம் 16 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


