News January 17, 2026

மதுரை: கார் மோதி காவலாளி பரிதாப பலி

image

கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த ராமராஜ் (65), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் பணியை முடித்து பைக்கில் வீட்டுக்கு வந்தபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 24, 2026

மதுரையில் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 24, 2026

மதுரையில் 1,598 கடைகளுக்கு ரூ.5 கோடி அபராதம்!

image

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,598 கடைகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 7,620 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 24, 2026

மதுரைக்கு மாவட்டத்தில் புதிதாக மேம்பாலங்கள்?

image

தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கேள்வி நேரத்தில் மதுரைக்கு தெப்பக்குளம், விரகனூர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பாலம் அமைக்க ஆய்வு பணிகள் முடிந்து அடுத்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். (இது குறித்து உங்கள் கருத்து)

error: Content is protected !!