News December 23, 2025

மதுரை: கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

மதுரை மாவட்டம், மேலூர் வண்ணம்பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் (25), நேற்று முன்தினம் மாலை மேலூருக்கு சென்றுவிட்டு, அவர் சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பினார். அப்போது ஆட்டுக்குளம் செல்விநகர் அருகே எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

மதுரை: கார் மோதி தொழிலாளி பலி.!

image

கொட்டாம்பட்டி, பள்ளப்பட்டி சேர்ந்தவர் ராமச்சந்திரன் (44). கட்டிடத் தொழிலாளியான இவர் நேற்று காலை டூவீலரில் இருந்து, நான்கு வழிச்சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வஞ்சிநகரம் அருகே இவருக்கு பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விபத்து குறித்து விசாரித்து வருகிறார்.

News December 26, 2025

மதுரை: வயல்வெளியில் மயங்கி கிடந்த முதியவர் பலி

image

மேலூர் அருகே தெற்கு தெரு வயல்வெளி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தெற்குதெரு விஏஓ மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று இறந்தார். இறந்த நபர் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 26, 2025

மதுரை: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

மதுரை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!