News May 7, 2024
மதுரை காந்தி அருங்காட்சியகம்

1959 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட இந்த காந்தி நினைவு அருங்காட்சியகம் மக்களின் ஆதரவும், நிதியுதவியுடன் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை எழுப்பப்பட்டது. இது ராணி மங்கம்மாள் அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் 1959 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவகம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது.
Similar News
News September 13, 2025
மதுரையில் தொழிலதிபர் வெட்டி படுகொலை

மதுரை பார்க் டவுன் 2-ஆவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் 52. முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்த இவர் நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்படுவதாக மனைவிக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். பார்ட் டவுன் அருகே சென்றபோது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். தொழில் போட்டியா என கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 13, 2025
மதுரையில் முதல் கிரிக்கெட் மைதானம் இங்கு தான்

மதுரை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள், இந்த நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் பிரம்மாண்டமாக கிரிக்கெட் மைதானம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது விரைவில் திறப்பு விழா காண இருப்பதாக அறிவிப்பு தெரியாதவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News September 12, 2025
மதுரை மாநகர் காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஏதேனும் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகார் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், காவல் அதிகாரி தொலைபேசி எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.