News January 21, 2026
மதுரை: காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

அவனியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ஆனந்தி(26). அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜரத்தினம் தென்காசியில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 2 குழந்தைகளுடன் தனித்து இருந்த ஆனந்தி மன அழுத்தத்தில் விஷம் குடித்து நேற்று மயங்கி விழ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 28, 2026
மதுரை : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
மதுரை: பெட்ரோல் குண்டு வீசிய போலீசார் மீது வழக்கு

கள்ளிக்குடியை சேர்ந்த மாணிக்கத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்து பிரச்சினை காரணமாக, அரிவாள், கத்தியுடன் வீடு புகுந்து மாணிக்கத்தை நேற்று முன்தினம் தாக்கி, பெட்ரோல் குண்டை வீசினர். சென்னை ஆயுதப்படை போலீஸ் மருதுபாண்டி(29), பெரியசாமி(55), சின்ன மாரிச்சாமி(50), சூர்யா(32) உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.
News January 28, 2026
மதுரை மக்களே பண்டிகைக்கு ரெடியா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 26, திருக்கல்யாணம் 28, தேரோட்டம் 29-ல் நடைபெறுகின்றன. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


