News December 25, 2025
மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
மதுரை: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

வாடிப்பட்டி அருகே எம்.புதுப்பட்டி சேர்ந்தவர் கண்ணன் மனைவி பஞ்சு (55). இவர் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் நெல் அறுவடை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது நெற்கதிரில் பதுங்கி இருந்த பாம்பு ஒன்று இவரை கடித்தது. சோழவந்தான் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மருத்துவமனை கொண்டு வரப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 25, 2025
மதுரையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News December 25, 2025
மதுரை: தீரா நோயால் மனமுடைந்து ஒருவர் தற்கொலை.!

ஒத்தக்கடை வசந்த நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (53). இவர்
மாட்டுத்தாவணி அருகே உள்ள மருத்துவமனையில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து
நேற்று (டிச.24) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


