News December 24, 2025
மதுரை: கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்

கள்ளிக்குடி செங்கப்படையை சேர்ந்தவர் மூர்த்தி(56). இவர் தன் மனைவி சரஸ்வதியுடன் பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார். ரெங்கப்பநாயக்கர் ஊரணி அருகே சென்ற போது பைக்கில் இருந்து மனைவி கீழே விழுந்தார். தலையில் பலமாக அடிபட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
மதுரை : உதவ சென்ற டிரைவர் உயிரிழந்த சோகம்

மதுரை கட்றாபாளையம் சாஸ்தா ட்ராவல்ஸ் டெம்போ டிரைவர் ஆறுமுகம் (70) ஆட்களை ஏற்றி ராமேஸ்வரம் செல்வதற்காக மேல ஆவணி மூல வீதி லாட்ஜிற்கு நேற்று காலை வந்தார். தனது வேன் அருகில் நின்ற கண்டெய்னர் லாரியின் பின் கதவு திறந்திருந்ததை கண்டு, அது ட்ரான்ஸ்பார்மரில் மோதாமல் இருப்பதற்காக அதை மூட சென்றார். அந்த கதவு டிரான்ஸ்பார்மர் எலக்ட்ரிக் லைனில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியாகினார்.
News December 30, 2025
மதுரை: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற,<
News December 30, 2025
மதுரை மக்களே., நாளையே கடைசி! CHECK பண்ணுங்க

மதுரை மக்களே பான் கார்டுடன் ஆதாரை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்வது கூட கடினமாகி விடும். எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை <


