News April 18, 2024
மதுரை – ஓஹா ரயில் சேவை நீட்டிப்பு!

குஜராத் மாநில தலைநகர் அஹமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை – ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520) மே 6 முதல் ஜுன் 24 வரை இயக்கப்படும் என மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
மதுரை: ஜப்தி செய்யப்பட்ட கார்; இளைஞர் தற்கொலை.!

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (30) சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவதற்காக, கே.கே. நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு கடந்த 6 மாதமாக தவணை கட்டாததால் பைனான்ஸ் அதிகாரிகள் காரை ஜப்தி செய்து விட்டனர். இதன் காரணமாக மனமுடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
மதுரை: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <


