News January 3, 2026
மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு துறையிலிருந்து, செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
மதுரை: ரூ.12 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

மதுரை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானம் கழக மதுரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஏழுமலை, உத்தபுரம், உசிலம்பட்டி, மேலூர், கருங்காலக்குடி, சோழவந்தான், விக்ரமங்கலம், செக்கானூரணி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, பாலமேடு பகுதியில் பலர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்தனர்.
News February 2, 2026
மதுரை: டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி

எழுமலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டி மகன் ஹரிவர்ஷன்(9). இவர் நேற்று முன்தினம் எழுமலை சாலையில் சைக்கிளில் சென்றபோது, வண்ணாத்தி கோவில் அருகே பின்னால் வந்த டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஹரிவர்ஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பேரையூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முகேஷ்(20) என்பவரை கைது செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 2, 2026
மதுரை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <


