News January 3, 2026
மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு துறையிலிருந்து, செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
மதுரைக்கு பொங்கல் பரிசாக ரூ.283 கோடி!

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,46,728 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 283 கோடியே 85 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE
News January 7, 2026
மதுரை: அரிய வகை நோயால் கன்றுக்குட்டி பாதிப்பு

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் தென்மண்டல கால்நடைத்துறை அலுவலகமும், பன்னோக்கு கால்நடை மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி பிறந்த கன்று குட்டி ஒன்றுக்கு பிறவியிலேயே ‘இக்தியோசிஸ் சுருக்கம்’ எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதன் உடல் நெருப்பில் கருகியது போன்று மாறியுள்ளதை கண்டு கால்நடைதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நவீன முறைப்படி கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.