News January 2, 2026
மதுரை: ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராஜ்குமார் (48). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று கருப்பாயூரணி பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆட்டோவில் சுருண்டு விழுந்து பலியானார். அவர் மனைவி ஜெயபிரபா அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 23, 2026
மதுரை : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

மதுரை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 23, 2026
மதுரையில் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலைநகரை சேர்ந்த தொழிலாளி ரவிச்சந்திரன் (55), நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் புகுந்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கொலைக்கான காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை.
News January 23, 2026
மதுரை: சிறுமியை திருமணம் செய்த கணவர் கைது

மதுரை, வண்டியூர் யாகப்பா நகரை சேர்ந்த வினோத்குமார் (32). சிறுமி ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். இந்த தகவல் கிழக்கு ஒன்றிய ஊர்நல அலுவலர் அமுதாவுக்கு தெரியவர அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் போக்சோ சட்டத்தில் வினோத்தை நேற்று கைது செய்தனர்.


