News July 25, 2024
மதுரை ஐகோர்ட்டில் 12 லட்சம் வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த 2004இல் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் இங்கு விசாரிக்கப்படுகின்றன. இன்று 21ஆம்ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதித்துள்ளது.
Similar News
News July 7, 2025
மதுரை: CM அதிரடி உத்தரவு

மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் அதிரடி உத்தரவு போட்டுள்ளார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை ஒன்-டூ-ஒன் என்ற தலைப்பில் முதல்வர் சந்தித்து வருகிறார்.
News July 7, 2025
மதுரை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரைக்கு 155 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974081>>மேலும் அறிய<<>>
News July 7, 2025
மதுரை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

மதுரை மாவட்டத்தில் 155 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அனுகலாம்.