News November 11, 2025

மதுரை: எய்ம்ஸ் மாணவர்கள் கல்லூரி பார்க்காமலே டிகிரி – மா.சு

image

மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி: 2022-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு 50 மாணவர்கள் சேர்ந்து, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது வரை 4 ஆண்டுகளில் 200 எய்ம்ஸ் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், இன்னும் எய்ம்ஸ் கட்டி முடிக்கவில்லை. இன்னும் ஓராண்டு முடிந்தால் எய்ம்ஸ் மாணவர்கள் கல்லூரியை பார்க்காமலே டிகிரி வாங்கி செல்வர் என்றார்.

Similar News

News November 11, 2025

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டது. இந்நிலையில் விமானநிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மதுரை விமான நிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புகள் போடபட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரபட்டுள்ளது.

News November 11, 2025

மதுரையில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் கிராமம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் கிராமம் அமைகிறது. இதில் ‘ஸ்குவாஷ்’ போட்டிக்கான அரங்கு மட்டும் விடுபட்டுள்ளது அதையும் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இம்மைதானத்தில் சர்வதேச அளவில் செயற்கை தடகள டிராக், ஹாக்கி டிராக், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் அமைக்கபட்டுள்ளது. 50 மீட்டர் நீச்சல்குளம் அமைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது.

News November 11, 2025

மதுரை: டிகிரி போதும், வங்கியில் வேலை!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!