News October 11, 2025

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை

image

மதுரையில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 10 புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ரூ.20,000 – 24,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு இங்கே <>CLICK <<>>செய்யவும். https://www.aiimsmadurai.edu.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும். (விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2025) *ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 5, 2026

மதுரை: குறுக்கே வந்த நாய்; பறிபோன உயிர்

image

குலமங்கலத்தை சேர்ந்த சேக்அமீர்(49) இன்று கோசாகுளம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வர அதன் மீது மோதினார். படுகாயத்துடன் வீட்டிற்கு சென்ற அவருக்கு கிராம மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் மயக்கம் அடைய, மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை.

News March 5, 2026

மதுரை: இளைஞர் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

சக்கிமங்கலம் அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மன அழுத்தத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை கோடாங்கி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை.

News March 5, 2026

மதுரை மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

error: Content is protected !!