News November 22, 2025
மதுரை: எகிறும் மல்லிகை விலை; இரட்டிப்பாக உயர்வு

மதுரை மல்லி கிலோ ரூ.2800, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.800, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.150, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1டன் வரத்து உள்ளது பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 28, 2026
மதுரை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

மதுரை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

சோழவந்தான் இரும்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 35, இவரது மனைவி விஜய பிரபா 28. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜய பிரபாவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த விஜய பிரபா சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோழவந்தான் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை.
News January 28, 2026
மதுரை தெப்ப திருவிழா பணிகள் தீவிரம்

மதுரை, தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 30 பணியாளா்கள் இந்தப் பணியை தொடா்ந்து செய்து வருகின்றனர்.


