News January 10, 2026
மதுரை: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்

மதுரை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
Similar News
News January 26, 2026
மதுரை: மகன் கஷ்டத்தை பார்த்து விஷம் குடித்த தந்தை

மதுரை, திருமங்கலம் மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் முனியசாமி, மாரிசாமி என்பவருடன் சேர்ந்து ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்த மாரிசாமி தனது பணத்தை உடனடியாக தர கட்டாயப்படுத்தி உள்ளார். தனது மகன் கஷ்டப்படுவதை பார்த்து மனமுடைந்த பாண்டியன் பூச்சி மருந்தை குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.
News January 26, 2026
மதுரை மக்களே இன்று உங்க அதிகாரத்துக்கான நாள்!

1 மதுரை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு / அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
மதுரை : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

மதுரை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..


