News November 26, 2025
மதுரை: இந்த மழைக் காலத்தில் இது ரொம்ப முக்கியம்.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்கிறது. மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுவதும், இடி மின்னலால் மின்மாற்றிகள் சேதமடையும் சம்பவங்களும் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களுடன் 9443111912 என்ற வாட்சப் எண்ணில், மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT
Similar News
News November 27, 2025
மதுரை ஐகோர்டில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் ஏழுமலை அடுத்த கோட்டைப்பட்டி சேர்ந்தவர் மகாலிங்கம். 2023 இல் தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். நேற்று இரவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனக் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் ஐகோர்ட் போலீசார் விசாரிக்கின்றனர்
News November 27, 2025
மதுரை: சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு போக்சோ

திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (27). இவர் 17 வயது சிறுமியை சோழவந்தான் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் ஊர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார்த்திக் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
News November 27, 2025
மதுரை: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


