News November 13, 2025
மதுரை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

மதுரை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே<
Similar News
News November 13, 2025
மேலூர்: இளைஞர் கொலை வழக்கில் நண்பர்கள் மூவர் கைது

மேலூர் செக்கடிபஜார் பகுதியில் கடந்த 9ஆம் தேதி மணிமாறன் என்ற இளைஞர் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக மேலூர் டிஎஸ்பி சிவகுமார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மணிமாறனின் நண்பர்களான ராஜேஷ், ரமேஷ், மற்றும் முகமதுயாசின் ஆகியோரை கைது செய்தனர்.
News November 13, 2025
மேலமடை சந்திப்பு பாலத்தை டிச.7ல் திறக்கிறார் முதல்வர்

மதுரை மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் கலெக்டர் பிரவீன்குமார், தளபதி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர். மேம்பாலங்கள் கட்ட முறையே ரூ.150 கோடி, ரூ.190 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலமடை சந்திப்பு மேம்பாலத்தை டிச.7ல் முதல்வர் திறக்கிறார். தற்போது பாலப் பணிகள் 97 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிவித்தனர்.
News November 13, 2025
மதுரையில் கிராம உதவியாளர் 110 பேர் கைது

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும், அடுத்த நிலை பதவி உயர்வு பெற பத்தாண்டு பணிநிறைவு என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.


