News February 7, 2026
மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவி பலி

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராமகண்ணன் மகள் விஜய்ஸ்ரீ(13), சிறுமலர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இச் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் கண்களை மூட முடியவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்பு மற்றும் நீல நிறமாக இருந்தது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 16, 2026
மதுரை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT

மதுரை புதிய மேம்பாலத்துக்கு பெயரை அறிவித்த முதல்வர்…!

மதுரையில் தமுக்கம் மைதானம் – நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பிப்ரவரி 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிலையில் மேம்பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என பெயர் சூட்டுவதாக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மேம்பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.