News January 6, 2026
மதுரை அருகே சுடுகாட்டில் இளைஞர் தற்கொலை

கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி சேர்ந்தவர் முருகன் மகன் பால்பாண்டி (25). மது போதைக்கு அடிமையாக இருந்த இவரை, மது அருத்த விடாமல் அவரது பெற்றோர் தடுத்து வந்தனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், வடக்கம்பட்டியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளிக்குடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 8, 2026
மதுரையில் இறைச்சி விற்க தடை; மீறினால்..!

மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
News January 8, 2026
மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <
News January 8, 2026
மதுரை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


