News September 12, 2025

மதுரை அருகே கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை..கொடூர செயல்..!

image

திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.டி.கல்லுப்பட்டி அருகே எல்.கொட்டாணிபட்டி பிரிவு நான்கு வழிச்சாலை ரோடு ஓரம் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றை மூடுவதற்காக பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி ஆய்வு செய்ய சென்றார். அப்போது கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரிகின்றனர்.

Similar News

News September 12, 2025

துணை ஜனாதிபதிக்கு மதுரை எம்பி வாழ்த்து

image

மதுரை துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய குடியரசின் நியதியை காக்க போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். மாநிலங்களவையை ஜெகதீப் தன்கர் நடத்திய விதம் அநீதியானது. இறுதியில் தன்கர் நடத்தப்பட்ட விதம் அதைவிட அநீதியானது என்றும் பதிவிட்டுள்ளார்

News September 12, 2025

மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

image

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News September 12, 2025

BREAKING: மதுரை போத்தீஸ் கடையில் ரெய்டு.!

image

மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில், அதிகாரிகள் கடையின் இருப்பு, விற்பனை ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனால் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!