News September 14, 2024
மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.
Similar News
News November 9, 2025
மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட, மதுரை ஆரப்பாளையம்
கிருஷ்ணம்பாளையம் 1வது தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகன் கோவிந்தம் பிள்ளை, நீதிமன்ற
விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால் தேடப்படும் குற்றவாளியாக, மதுரை கூடுதல் மகிளா நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
News November 9, 2025
தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.
News November 9, 2025
மதுரை: EB பில் அதிகம் வருதா??

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


