News December 21, 2025
மதுரை: அரசு அலுவலகம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

மேலூரை சேர்ந்த ஞானசேகர்(29) மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். நேற்று அலுவலகத்திற்கு வந்த நாகராஜன்(52) என்பவர் தகராறில் ஈடுபட்டு, அருகில்
கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த ஞானசேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.
Similar News
News December 23, 2025
மதுரை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

மதுரை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News December 23, 2025
மதுரையில் நாயை அரிவாளால் வெட்டி கொடூரன்.!

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் செல்வம் 53 கோயில் பூசாரி, கோவில் பகுதியில் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதி முத்துராஜ் 27 கோயில் அருகில் வரும் போது செல்வம் வளர்க்கும் நாய்கள் அடிக்கடி குறைத்துள்ளன, ஆத்திரமடைந்த முத்துராஜ் நேற்று கையில் இருந்த அரிவாளால் நாய்களில் ஒன்றை வெட்டினார், தட்டி கேட்ட கோவில் பூசாரி செல்வத்தை மிரட்டினார். போலீசார் முத்துராஜை கைது செய்தனர்.
News December 23, 2025
மேலூர்: சாலை விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு முனிக்கோவில் அருகே 4 வழிச்சாலையில் இன்று (டிசம்பர் 23) அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் போலீசார். இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


