News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
Similar News
News October 15, 2025
மதுரை: தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

மதுரை வேல்முருகன் நகரில் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்கும் விவகாரத்தில் தி.மு.க மாநகராட்சி கவுன்சிலர் அமுதாவின் கணவரும், பகுதி செயலாளருமான தவமணி மீது, குடியிருப்பு சங்க நிர்வாகிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்வன்முறை தடுப்புச்சட்டம் உட்பட 5பிரிவுகளின்கீழ் SSகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மே லும் சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் பதவியில் இருந்தும் தவமணி நீக்கப்பட்டுள்ளார்.
News October 15, 2025
மதுரை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <
News October 15, 2025
அழகர்கோவில் உண்டியல் திறப்பு

மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் கோயிலில் மாதாந்திர உண்டியல் என்னும் பணிக்காக துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.48 லட்சத்து 98 ஆயிரத்து 950 ரொக்கம், 25.5 கிராம் தங்கம், 200.64 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன. என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்தது.