News February 17, 2025

மதுரையில் 2213 காலிப்பணியிடங்கள் 

image

மதுரை மாவட்ட சத்துணவுத் திட்டத்தில் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர் பணியிடங்கள் 4,256க்கு மொத்தம் 2,213 இடங்கள் காலியாக உள்ளது. சுமார் 50% காலிப்பணியிடம் உள்ளதால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். சென்ற 2017 முதல் இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 10, 2026

மதுரை: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

image

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

BREAKING மதுரை: சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒப்புதல்

image

மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஏற்கெனவே மக்களவையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.

News March 10, 2026

மதுரை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!